TN Government Secretariat Recruitment 2021 – @www.tn.gov.in

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் வேலை 

சென்னை, தலைமைச் செயலகம் , மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி , சென்னை தலைமைச் செயலக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அரசு சார்புச் செயலாளரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.12.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TN Government Secretariat Recruitment Details

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

சம்பளம்

Rs.15700 – 58100/-

கல்வித் தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை

02

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது


தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

ரேசன் கடை வேலை

தமிழக மாநகராட்சியில் வேலை


தேர்வு செய்யும் முறை

நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

1. விண்ணப்பதாரர் இந்தியராக இருத்தல் வேண்டும் .

2. விண்ணப்ப படிவம் சரியான தகவல்களுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் . குறைபாடு உடைய , முழுமையாக பூர்த்தி செய்யப்படாத , தவறான தகவல்களை அளித்துள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

3. நேர்காணலின்போது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் ( ம ) இதர அசல் சான்றிதழ்களுடன் வரப்பெற வேண்டும்.

4. சான்றிதழ்களின் நகல் , மதிப்பெண்கள் சான்றிதழ் , வயது , இனம் மற்றும் இதர சான்றிதழ்களை விண்ணப்ப படிவத்துடன் சுய சான்றொப்பமிட்டு சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்.

5. விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசி நாளான 10.12.2021 மாலை 5.45 மணிக்குக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

6. நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி / அகவிலைப்படி அளிக்கப்படமாட்டாது.

7. விண்ணப்ப படிவத்தில் ஒட்டி அனுப்பப்பட்டுள்ள புகைப்படம் போன்று இரண்டு ( 2 ) புகைப்படங்கள் நேர்காணலின் போது எடுத்து வர வேண்டும்.

8. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

அரசு சார்புச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நல (அநமு)த் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 10.12.2021 மாலை 5.45 மணி வரை

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TN Government Secretariat Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

Leave a Comment